search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சன்னி லியோன்"

    • பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
    • தற்போது நடிகர் சதீஷுடன் இணைந்து 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்துள்ளார்.

    ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தொடர்ந்து நடிகர் சதீஷுடன் இணைந்து 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


    சன்னி லியோன்

    நடிகை சன்னிலியோன் திரைப்படங்களில் கவர்ச்சி நடனமாட நிபந்தனை விதித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது,  "நான் தொடர்ந்து பல படங்களில் குத்துப்பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமாடி வருகிறேன். என்னை பற்றி யாருக்கும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது.


    சன்னி லியோன்

    படப்பிடிப்பில் நான் கவர்ச்சி நடனம் ஆடும்போது சுற்றுப்புறத்தில் குழந்தைகள் இருக்கக்கூடாது என்று கண்டிப்பாக கூறியிருக்கிறேன். ஏனென்றால் குத்துப்பாடல் நடனத்தில் நிச்சயம் வயது வந்தோர் காட்சிகள் இருக்கும். அப்போது சுற்றுப்புறத்தில் குழந்தைகள் இருந்தால் நானே தலையிட்டு படப்பிடிப்பை நிறுத்திவிடுவேன்" என்று கூறியுள்ளார்.

    • அலைகள் ஓய்வதில்லை, நினைவெல்லாம் நித்யா, நல்ல தம்பி, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கார்த்திக்.
    • இவர் தற்போது நடித்து வரும் தீ இவன் படத்தில் சன்னி லியோன் இணைந்துள்ளார்.

    பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் கார்த்திக். அதன்பின்னர் நினைவெல்லாம் நித்யா, நல்ல தம்பி, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். இவர் தற்போது மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "தீ இவன்" படத்தில் நடித்து வருகிறார்.

    இதில் சுகன்யா, ராதா ரவி, சுமன்.ஜே, ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கி தயாரித்த டி.எம்.ஜெயமுருகன் கதை, திரைக்கதை, வசனம், இசை மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் ஒளிப்பதிவை ஒய்.என். முரளி மேற்கொள்ள படத்தொகுப்பை மொகமத் இத்ரிஸ் கையாளுகிறார். இப்படம் பற்றி இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் கூறியதாவது, நம் தமிழ் சமுதாயம் கலை மற்றும் கலாச்சாரம், சமூக உறவுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டது ஆனால் இன்று அவைகள் கட்டுப்பாடுகளை இழந்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறைக்கு நம் உறவையும் கலாச்சாரத்தையும் கொண்டுசெல்லும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.

    இந்த படத்தில் இடம் பெறவுள்ள "மேலே ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம்" என்ற பாடலுக்கு நடிகை சன்னி லியோனை நடனமாட வைக்க வேண்டும் என்று வெகு நாட்கள் காத்திருந்தோம், அந்த ஆசை தற்போது நிஜமாகியுள்ளது. நேற்றைய முன்தினம் மும்பை சென்று நடிகை சன்னி லியோனை நேரில் சந்தித்து படம் பற்றி கூறினேன் கதை மற்றும் நடிகர்களை கேட்டவுடன் அந்த பாடலுக்கு நடமாட ஒப்புக்கொண்டார். அதோடு பாடல் வரிகள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார்.

    இந்த பாடலின் படப்பிடிப்பு நவம்பர் 15-ஆம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து நடைபெற உள்ளது.

    • பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
    • இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

    ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தற்போது நடிகர் சதீஷுடன் இணைந்து 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

     

    சன்னி லியோன்

    சன்னி லியோன்

     

    சமூக வலைத்தளத் தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சரியான சூரிய அஸ்தமனம்!! என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். 

    • பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
    • இவரின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

    ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தற்போது நடிகர் சதீஷுடன் இணைந்து 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


    சன்னி லியோன்

    சமூக வலைத்தளத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    தற்போது இவர் மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் லைக் செய்து வருகின்றனர்.


    • நடிகை சன்னி லியோன் தமிழில் நடிக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'.
    • இந்த படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார்.

    இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'. இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.


    ஓ மை கோஸ்ட்

    இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே சசி குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார்.


    ஓ மை கோஸ்ட்

    இந்நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன், காமெடி பாணியில் உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.



    • பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
    • அவர் தற்போது பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தற்போது தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பேய்ப்படம் ஒன்றில் காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து நடித்து வருகிறார்.

    சன்னி லியோன்

    சன்னி லியோன்


    சமூக வலைத்தளத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற சன்னி லியோன் பிகினி உடையில் கவர்ச்சியாக எடுத்துகொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இருந்தார்.


    சன்னி லியோன்

    சன்னி லியோன்


    இந்நிலையில், சன்னி லியோன் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நீச்சல் குளம் அருகில் நடந்து வரும் சன்னி லியோனை அவருடைய நண்பர் நீரில் தள்ளி விடுகிறார். இதனால் அவருடைய நண்பரை செருப்பை தூக்கி எறிந்து சன்னி அடிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



    ×